என்ன — மருத்துவமனைகளுக்கான அரசின் தேசிய தீ பாதுகாப்பு விதிகள். 2020 பதிப்புக்குப் பதிலாக இது வரும். NBC 2016 & மாநில தீ சட்டங்கள் — கட்டாயம். செல்லுபடியாகும் தீ பாதுகாப்பு சான்றிதழ் — கட்டாயம் (§7.2).
யாருக்கு — இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மருத்துவமனையும் நர்சிங் ஹோமும் — அரசு & தனியார், பழையது & புதியது.
எப்போதிலிருந்து — 04.05.2026. தீ பாதுகாப்பு குழுவும் தீ பாதுகாப்பு அதிகாரியும் — இப்போதே நியமிக்க வேண்டும். தீ ஆபத்து சோதனை — 3 மாதத்திற்கு ஒருமுறை. முழு தீ + மின்சார தணிக்கை — ஆண்டுக்கு ஒருமுறை. தீ ஆபத்து பதிவேடும், தணிக்கை & திருத்த நடவடிக்கை பதிவுகளும் — கட்டுப்பாட்டு அதிகாரிகளும் NABH-உம் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம் (§3.1, §5.5).
| கட்டாயக் கட்டளை — அறிவிப்பின்படி (§ / பக்கம்) | Stanvac தீர்வு |
|---|---|
| 1 · மின்சார நிறுவல் Annex A4 p.53 · §4.1.3 p.23–24 · CEA 2023
வயரிங் தீயைப் பரப்பக் கூடாது. பாதுகாப்பு சுற்றுகள் தீ வந்தாலும் நின்று போகாமல் இயங்க வேண்டும். மருத்துவமனைகள் BD4 வகை — கட்டிடங்களிலேயே மிக அதிக ஆபத்துள்ளவை (IS 732). ICU, NICU, OT-ல் இன்னும் கூடுதல் கவனம் தேவை. |
|
| 2 · ஒவ்வொரு கேபிள் கடப்பிலும் தணிக்கை Annex 1, A3.1(2) p.50
கட்டாய ஆய்வு (IS 732 cl. 4.3): கேபிள்கள் சுவர், தளம், ஷாஃப்ட் கடக்கும் ஒவ்வொரு திறப்பையும் சோதிக்க வேண்டும். சீல் செய்திருந்தால், எந்த தயாரிப்பு, எந்த வகை, உற்பத்தியாளரின் சோதனை அறிக்கை, எப்படி பொருத்தினோம் என்பதையும் பதிவு செய்ய வேண்டும். |
|
| 3 · இருக்கும் வயரிங் — அறிவிப்பு என்ன சொல்கிறது §4.1.3 p.23 · Annex 1 A3 · IS 732 (BD4)
HFFR — அதாவது ஹாலஜன் இல்லாத, தீப் பிடிக்காத வகை — வழிகாட்டுதல் சொல்லும் தரம். புதிய நிறுவலுக்கு NEC 2023 (§4.1.3) பின்பற்றலாம் என்று சொல்கிறது. ஏற்கனவே உள்ள வயரிங்கிற்கு — மின் அதிர்ச்சி, மின்சார தீயில் இருந்து காக்க “சிறப்பு கவனம்” தேவை (§4.1.3). தீ பரவாமல் தடுக்க வேண்டும், எல்லா இடங்களிலும் ஆய்வு கட்டாயம் (Annex 1 A3 · IS 732 cl 4.3). கடமை: தீ பரவக் கூடாது · சிறப்பு கவனம் · சீல் செய்ததை பதிவு செய்ய வேண்டும் — மாற்றி போட வேண்டியதில்லை. |
|
| 4 · பிரிவறை அமைப்பு — வடிவமைப்புக் கடமை §4.2 p.24–25
ஒவ்வொரு தளமும் தீ தாங்கும் பிரிவறைகளாகப் பிரிக்க வேண்டும். ஒவ்வொரு ஷாஃப்ட்டும் ஒவ்வொரு தளத்திலும் சீல் செய்ய வேண்டும். நோயாளிகளை பக்கத்துப் பிரிவறைக்குத்தான் நகர்த்துவோம் — பிரிவறை தாங்கினால்தான் இது வேலை செய்யும். |
|
| 5 · எரியாத மேற்பரப்புகள் §4.1.1 p.23
கட்டமைப்பு, முடிப்பு, ஃபால்ஸ் சீலிங் — இவை எரியவோ தீயைச் சுமக்கவோ கூடாது. புதிய கட்டுமானத்திற்குக் கட்டாயம். இருக்கும் கட்டிடத்தை மாற்றும்போது, அல்லது அதிகாரம் ஆபத்து என்று சொன்னால், அதற்கும் கட்டாயம். |
|
| என்ன நடக்கும் | யார் பொறுப்பு |
|---|---|
| தீ பாதுகாப்பு சான்றிதழ் ரத்தாகும் — கட்டிடத்தை மூடிடலாம் (மாநில தீ சட்டங்கள்). | மருத்துவமனை |
| தீயில் ஒரு உயிர் போனால் — 5 வருடம் வரை சிறை — BNS 2023 §106. உயிருக்கு ஆபத்து வந்தாலே — §125. | உரிமையாளர்கள் · அறங்காவலர்கள் · MS / CEO — தனிப்பட்ட முறையில் |
| ஒவ்வொரு தணிக்கையும் இப்போது பதிவில் இருக்கும் (தீ ஆபத்து பதிவேடு + தணிக்கை கோப்பு). குறை தெரிந்தும் சரி செய்யாவிட்டால் — அதுவே அலட்சியத்திற்கான ஆதாரம். | தெரிந்தும் நடவடிக்கை எடுக்காதவர் |
| NABH நிறுத்தப்படும். பணமில்லா காப்பீட்டு ஒப்பந்தங்கள் நிறுத்தப்படும். தீ காப்பீட்டு கோரிக்கை நிராகரிக்கப்படும். | மருத்துவமனையின் வருமானம் |
| நுகர்வோர் நீதிமன்றம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு கொடுக்க உத்தரவிடும். | மருத்துவமனை செலுத்த வேண்டும் |